Saturday 12 November 2011

காலத்தின் ஏமாற்றம்



மனிதனின் விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டும் என்று நினைத்து மருத்துவர் வழியாகக் குழந்தையின் விதியை நிர்ணயிக்கிறார்கள். அக்குழந்தை செல்வந்தராக வாழ்வதற்காக அவ்வாறு பிறக்க வைக்கிறார்கள். கடவுள் நிர்ணயிபவை பிறப்பும் இறப்புமே. ஆனால் நாம் பிறப்பை நிர்ணயித்துவிட்டோம். இறப்பை நிர்ணயிக்க ஆரம்பித்துவிட்டோமானால் என்றால் அது ஓர் அதிசய ஆண்டாகும். 2011 உலகத்தில் அதிகபட்ச குழந்தை பிறக்கும் நேரத்தை மனிதன் நிர்ணயித்துவிட்டான். எதிர்காலத்தில் 11.11.2111இல் மனிதன் இறப்பை நிர்ணயித்துவிட்டால் என்றால் அந்த ஆண்டு முதல் அழிவும் ஆரம்பம் மனித இனத்திற்கு.   

Power cut தமிழக மக்களுக்கா? கூடங்குளம் மக்களுக்கா?




ஒன்றுபட்ட மக்களை இரண்டாகப்பிரிக்க வந்த கூடங்குள அணுமின் நிலையம். மின் வினியோகத் துண்டிப்பு நேரம் ஒரு மணிநேரத்திலிருந்து ஐந்து மணிநேரமாக மாறியது மக்களின் மனத்தில் இருவேறுகருத்துகளை ஏற்படுத்தியது கூடங்குளம் அணுஉலையையேச் சாரும். 500கி.மீ. தொலைவில் ஒரு விபத்து நடந்து அது நமக்குத் தெரியவந்தால் அதனை நாம் ஒரு செய்தியாகவோ எண்ணுவோம். அதே நிகழ்வு நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கும் போது அதைக் கோபத்துடன் துக்கமாக எண்ணுவோம். அதே போன்ற எண்ணம்தான் கூடங்குளம் மக்களின்  எண்ணமும். மக்கள் அணுஉலையின் ஆபத்தை நினைத்து அஞ்சவில்லை. அவர்கள் விருப்பம் வேண்டாம் என்பதே. பயம் அல்ல. அணுஉலையின் அஸ்திவாரம் இவர்களுக்குத் தெரியும். அப்போது அமைதி காத்துவிட்டுத் தற்போது ஏன்? இது உங்கள் மனத்திற்கு எழுப்பப்பட்ட வினா?. Because we are all Human man's.   

Wednesday 9 November 2011

ஒன்றுமில்லை நினைக்க



ஆண்டவன் படைப்பில் அதிசியம் மனிதன். ஆனால் மனிதனாக வாழ்வது கொடுமை என்று அவ்வப்போது தோன்றுகின்றது. உறவுக்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பு, உறவுகள் துன்பத்தில் இருக்கும்போது மனிதன் மனிதனை
எவ்வாறெல்லாம் துன்பத்திற்குள் ஆட்படுத்துகின்றார்கள் என்று கடவுளே வருந்தும் காலம் இது. இது கலிகாலம். பொற்காலம் என்று எதைக் கூறலாம் என்றால் குழந்தைப் பருவம்தான் என நினைக்கின்றேன். இப்பருவத்தில் பெற்றோர்கள் தங்களது சுயகுணங்களை அவர்களின் உள்ளத்தில் நிறப்புகின்றனர். பதினைந்து வயதுமுதல் நாம் நமது சுய விருப்பத்திற்குஏற்ப வளர்கின்றோம் - வாழ்கின்றோம். பின்னர் பொறுப்புகளை ஏற்றபின் கடந்த காலத்தை நினைக்கும்போது அதில் நிம்மதி இருப்பதில்லை.

Saturday 5 November 2011

கூட்டுக்குடும்பமும் கூடங்குளமும்



கூட்டுக்குடும்பத்தில் வாழும் மருமகளின் குரல் எடுபடாததுபோலக் கூடங்குளம்   மக்களின் குரலும் எடுபடவில்லை. காரணம் இந்தியப் பிரதமர் கூட்டுக்குடும்பத்தில் வாழும் கணவர்போல எந்த முடிவினையும் சுயமாக எடுக்கஇயலாதவர். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவினையே முன்மொழிவார். இதில் மருமகளின் உரிமையும் உணர்வும் நிராகரிக்கப்படுவதைப்போல மக்களின் உணர்வும் உரிமையும் மதிக்கப்படாது. 









Friday 4 November 2011

ஆபாசங்களை முற்றிலுமாக நீக்கவேண்டும்.



ஓவியம் உதவி http://www.penniyam.com/2011/07/blog-post_24.html நன்றி

இணையதளங்களில் உள்ள ஆபாசங்களை முற்றிலுமாக நீக்கவேண்டும். ஆபாசம் என்பதே பெண்களை மையப்படுத்தியதாகவே இருப்பதால் பாதிப்படைவது பெண்களே. குறைந்தபட்சம் இனியாவது ஆபாசங்கள் பெருகாமல் இருக்க முயற்சியெடுக்கவேண்டும். எதிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்.ஆனால் ஆபாசங்களால் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். 

Thursday 3 November 2011

மலிவான இலவசம்



மாதவிலக்கு உபகரணத்தை தமிழகஅரசு மலிவுவிலைக்கு வழங்கிவருகின்றது. அதற்குப் பதிலாகப் பெண்ணினத்திற்காகத் தமிழக அரசு ”பிரசவத்திற்கு இலவசம்” என்று அறிவித்திருக்கலாம். ஆட்டோக்களின் பின்புறம் எழுதுவதைவிட அனைத்து மருத்துவமனைகளிலும் இதனை அரசு நடைமுறைப்படுத்தலாம். 

உணர்வும் விருப்பமும் வேறுவேறு



உணர்வும் விருப்பமும் வேறுவேறு. ஒருவருக்கொருவர் தனக்கு எதுதேவையோ  அவற்றறைத் தெரிந்துகொள்வது விருப்பம். ஆனால் கூறமுடியாதது உணர்வு. ஒருவரின் உணர்வை ஒருதடவை உணர்ந்தால் மட்டும் போதாது. தினமும் உணர்வை உணருங்கள். ஆனால் அது கடினம். அக்கடினத்தைக் கடந்தால் தூய அன்பு கிடைக்கும். உணர்வை உணர்ந்தால் உங்கள் எதிரில் உள்ளர் மனத்தளவில்  உங்கள் அருகில் இருப்பார். உணர்வை உணந்தால் உயிர் உள்ளவரை நேசிப்பீர்கள். போலி வாழ்க்கை எதுவெனத் தெரியும்.