Wednesday 9 November 2011

ஒன்றுமில்லை நினைக்க



ஆண்டவன் படைப்பில் அதிசியம் மனிதன். ஆனால் மனிதனாக வாழ்வது கொடுமை என்று அவ்வப்போது தோன்றுகின்றது. உறவுக்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பு, உறவுகள் துன்பத்தில் இருக்கும்போது மனிதன் மனிதனை
எவ்வாறெல்லாம் துன்பத்திற்குள் ஆட்படுத்துகின்றார்கள் என்று கடவுளே வருந்தும் காலம் இது. இது கலிகாலம். பொற்காலம் என்று எதைக் கூறலாம் என்றால் குழந்தைப் பருவம்தான் என நினைக்கின்றேன். இப்பருவத்தில் பெற்றோர்கள் தங்களது சுயகுணங்களை அவர்களின் உள்ளத்தில் நிறப்புகின்றனர். பதினைந்து வயதுமுதல் நாம் நமது சுய விருப்பத்திற்குஏற்ப வளர்கின்றோம் - வாழ்கின்றோம். பின்னர் பொறுப்புகளை ஏற்றபின் கடந்த காலத்தை நினைக்கும்போது அதில் நிம்மதி இருப்பதில்லை.