Sunday 23 October 2011

சிகரெட் கலாச்சாரம்

பெட்டிக்கடைகள் மாணவர் மத்தியில் சிகரெட் கலாச்சாரத்தை வளர்த்துவருகின்றன. சில பெட்டிக்கடைகளின் முதன்மை வருமானமே சிகரெட்தான். ஆதலால் சிகரெட் வாங்க வரும் மனிதர்களுக்கு அவர்கள் பல வசதிகளையும் (அவர்கள் அமர்வதற்கு ஏற்ற வகையில் ஸ்டீல் கட்டில் , வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்களுக்குப் படுதாத் திரை போன்றன) நல்கிவருகின்றனர்.  

எச்சில் துப்பும் மரபு


பொது இடத்தில் எச்சில் துப்பும் மரபு நம் நாட்டில் மலிந்திருக்கின்றது. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இருப்பதில்லை. வயது வித்தியாசமில்லை. எச்சில் நம் உடலில் உள்ள அத்தனைக் கிருமிகளுக்கும் பரவ உதவும் ஓர் ஊடகம். மருந்தைத் தெளிப்பதைப் போல எச்சிலைத் தெளித்து நோயைப் பரப்பி வருகின்றோம். இனி யாவது இதில் கவனம்கொள்வோம்.

Thursday 20 October 2011

உலகத்தில் எந்த அணுமின்நிலையமும் செயல்படக்கூடாது. அவை பாதுகாப்பானது அல்ல என்று தெரிந்தும் அதனை ஏன் நாம் உருவாக்கவேண்டும்? மிகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தினாலும் அது எப்போதும் ஆபத்தையே விளைவிக்கும். இது நமக்குத் தேவைதானா? மின்சாரத்தை வேறுவழிகளில் உற்பத்திசெய்யலாம். அதனை ஏன் நாம் முயன்று ஏற்படுத்தக்கூடாது? அணுமின் விஞ்ஞானிகள்  மாற்றுவழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மனித இனத்தை அழிக்கும் அணுமின் நிலையம் தேவையில்லை. அவர்களின் போராட்டம் விவாதத்திற்கு உரியது அல்ல.

குப்பைக்கு “குட்பை“

சாலையில் நடக்கும்போது நம் பாதங்களில் மிதிபடுவன நாம் பயன்படுத்திய உணவுப்பொருள்களின் மேல்லுறைகள் போன்றனவே. என் மகளுடன் நான் நடந்துசெல்லும்போது சாலையோரங்களில் சிதறிக்கிடப்பன அவைகளே. அவற்றை நாம் உரிய இடத்தில் சேர்க்கலாமே! அவற்றை ஒரு குப்பைத்தொட்டியில் போட ஏதேனும் ஒரு வழிசெய்ய என் மனம் ஏங்குகின்றது. தொட்டி இல்லை எனில் நம் நாடே ஒரு குப்பைத்தொட்டியாகிவிடும் அல்லவா. நம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளளாமே. அது நம் மனித இனத்திற்கு நன்மைதரும் அல்லவா?

எதிர்காலத்தின் எதிரொலியும் எதிரொளியும்

கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் பின் விளைவுகள் குறித்துச் சிந்திக்கவேண்டும். அது நம் நாட்டுமக்களின் எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வாக மாறவேண்டும்.