Saturday 12 November 2011

Power cut தமிழக மக்களுக்கா? கூடங்குளம் மக்களுக்கா?




ஒன்றுபட்ட மக்களை இரண்டாகப்பிரிக்க வந்த கூடங்குள அணுமின் நிலையம். மின் வினியோகத் துண்டிப்பு நேரம் ஒரு மணிநேரத்திலிருந்து ஐந்து மணிநேரமாக மாறியது மக்களின் மனத்தில் இருவேறுகருத்துகளை ஏற்படுத்தியது கூடங்குளம் அணுஉலையையேச் சாரும். 500கி.மீ. தொலைவில் ஒரு விபத்து நடந்து அது நமக்குத் தெரியவந்தால் அதனை நாம் ஒரு செய்தியாகவோ எண்ணுவோம். அதே நிகழ்வு நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கும் போது அதைக் கோபத்துடன் துக்கமாக எண்ணுவோம். அதே போன்ற எண்ணம்தான் கூடங்குளம் மக்களின்  எண்ணமும். மக்கள் அணுஉலையின் ஆபத்தை நினைத்து அஞ்சவில்லை. அவர்கள் விருப்பம் வேண்டாம் என்பதே. பயம் அல்ல. அணுஉலையின் அஸ்திவாரம் இவர்களுக்குத் தெரியும். அப்போது அமைதி காத்துவிட்டுத் தற்போது ஏன்? இது உங்கள் மனத்திற்கு எழுப்பப்பட்ட வினா?. Because we are all Human man's.